தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயணப்பை திருட்டு: பெண்ணுக்கு ரூ.108,000 இழப்பீடு வழங்க இந்திய ரயில்வேக்கு உத்தரவு

1 mins read
abf6b32a-32bf-4153-b182-121ed4663859
மாதிரிப்படம்: - ஊடகம்

புதுடெல்லி: ரயில் பயணத்தின்போது பயணப்பையைப் பறிகொடுத்த பெண்ணுக்கு இந்திய ரயில்வே ரூ.108,000 இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஜனவரி மாதம் அப்பெண், மால்வா விரைவு ரயிலில் டெல்லியிலிருந்து இந்தூர்வரை பயணம் செய்தார். முன்பதிவுப் பயணிகளுக்கான பெட்டியில் பயணம் செய்தபோதும் அவரது பை களவுபோனது.

தமது பையில் ரூ.80,000 பெறுமானமுள்ள பொருள்களை அவர் வைத்திருந்ததாகக் கூறப்பட்டது.

இதனையடுத்து, அவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகாரளித்தார்.

அவரது மனுவை ஏற்று விசாரித்த ஆணையம், “ரயில்வே துறை கவனக்குறைவின்றிச் செயல்பட்டிருந்தால் அல்லது சேவையில் குறை இல்லாமல் இருந்திருந்தால் அப்பெண் பயணி தமது பையை இழந்திருக்க மாட்டார். அவரது பையில் இருந்த உடைமைகளின் மதிப்பு குறித்து மறுப்பதற்கு ரயில்வே துறையிடம் எந்தச் சான்றும் இல்லை. ஆதலால், அவர் ரூ.80,000 இழப்பீடு பெற உரிமையுள்ளது,” என்று தீர்ப்பளித்தது.

அத்துடன், அப்பெண் எதிர்கொண்ட வசதிக்குறைவு, துன்புறுத்தல், மனவுளைச்சல் ஆகியவற்றுக்காக 20,000 ரூபாயும் வழக்குச் செலவிற்காக 8,000 ரூபாயும் அவருக்கு வழங்க உத்தரவிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்