ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்த இந்தியக் கப்பல்

ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்த இந்தியக் கப்பல்

படம்: சின்னிமண்டி

05 Apr 2026 - 10:25 am

1 mins read

மும்பை: இந்திய அரசாங்கம், திரவ இயற்கை எரிவாயுவைச் சுமந்துசெல்லும் தனது சரக்குக் கப்பல் ஒன்று ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது நடத்திய தாக்குதலை அடுத்து, ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்ல ஈரான் தடைவிதித்தது.

அதன்வழியாக அனைத்துலக அளவில் கச்சா எண்ணெய்யும் எரிவாயும் கப்பல்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகின்றன.

இருப்பினும், திரவ பெட்ரோலிய எரிவாயுவைக் கொள்முதல் செய்யும் இரண்டாம் ஆகப் பெரிய நாடான இந்தியா, ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தனது கப்பல்கள் கடந்துசெல்ல அனுமதி பெற்றுள்ளது. அதன் மூலம் கடந்த மூன்று வாரங்களாக இந்தியாவின் சரக்குக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துள்ளன.

இந்நிலையில், திரவ பெட்ரோலிய எரிவாயுவைச் சுமந்துசென்ற கிரீன் சான்வி என்ற சரக்குக் கப்பல் நீரிணையைக் கடந்துவிட்டதை இந்தியக் கப்பல் போக்குவரத்து அமைச்சு உறுதிப்படுத்தியது.

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துள்ள கிரீன் சான்வி கப்பல் 46,650 மெட்ரிக் டன் எடையுள்ள திரவ பெட்ரோலிய எரிவாயுவைச் சுமந்துசெல்வதாக அமைச்சு குறிப்பிட்டது.

இதற்கிடையே, 460 இந்திய ஊழியர்கள் கொண்ட 17 சரக்குக் கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியில் இன்னமும் இருப்பதாக அது கூறியது.

குறிப்புச் சொற்கள்
புதுடெல்லிஹோர்முஸ்நீரிணைசரக்குகப்பல்