அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை (மார்ச் 3) புதுடெல்லி சென்றுகொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்திய மாணவர் ஒருவர் சக பயணிமீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்பட்டது.
ஆரியா வோஹ்ரா எனும் அந்த 21 வயது இளையரை விமானத்தில் பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் வைக்க விமான நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
அதிக அளவு மது அருந்திய அந்த ஆடவர் தொடர்ந்து விமானச் சிப்பந்திகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இருக்கையில் அமர மறுத்து விமானத்திற்கும் அதில் பயணம் செய்த மற்றவர்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும் இறுதியில் சக பயணி ஒருவர்மீது சிறுநீர் கழித்ததாகவும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியது.