தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட் விளையாடியபின் தண்ணீர் குடித்த இளையர் உயிரிழப்பு

1 mins read
b4e78cfe-a99d-4432-97bc-bcfa74daf06c
இளையருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. - மாதிரிப்படம்

லக்னோ: கிரிக்கெட் விளையாடியபின் தண்ணீர் குடித்ததும் 17 வயது இளையர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், அல்மோரா மாவட்டத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 30) நிகழ்ந்தது.

ஹசன்பூரைச் சேர்ந்த பிரின்ஸ் சைனி என்ற அந்த இளையர் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார்.

சம்பவ நாளன்று அவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார்.

போட்டி முடிந்ததும் அவர் தண்ணீர் அருந்தியதாகவும் உடனடியாக மயங்கி விழுந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

உடனே பிரின்சின் நண்பர்கள் அதுபற்றி அவருடைய பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, பிரின்ஸ் விரைந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பிரின்ஸ் இறந்ததற்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இதன் தொடர்பில் பிரின்சின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை எனக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்