அன்டார்க்டிக்காவின் ஆக உயரமான சிகரத்தைத் தொட்ட இந்தியப் பெண்

1 mins read
940a90bf-9024-4db1-afd3-01a9ce1b0d80
சாதனை படைத்துள்ள கவிதா சந்த். - படம்: ஏஎன்ஐ

புதுடெல்லி: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கவிதா சந்த் எனும் பெண்மணி அன்டார்க்டிக்காவின் ஆக உயரமான சிகரத்தைத் தொட்டுள்ளார்.

உள்ளூர் நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) இரவு எட்டரை மணிக்கு வின்சன் (Vinson) சிகரத்தைத் தொட்ட இவர், இந்திய மலையேற்ற வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

4,892 மீட்டர் உயரம்கொண்ட சிகரத்தை 40 வயது கவிதா எட்டியிருக்கிறார். இவரின் சாதனைக்குப் பலர் அதிலும் குறிப்பாக இவரின் சொந்த மாநிலத்தார் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளனர். தற்போது கவிதா, மும்பை நகரில் வசிக்கிறார்.

உலகின் ஏழு சிகரங்களைத் தொடும் முயற்சியில் கவிதா ஈடுபட்டுள்ளார். வின்சன் சிகரத்தைத் தொட்டது அம்முயற்சியில் அடங்கும்.

உத்தராகண்ட் சிறு மலைகளில் தொடங்கிய கவிதாவின் மலையேற்றப் பயணம் இப்போது உலகின் ஆக ஒதுக்குப்புறமான, எளிதில் போக இயலாத ஒரு சிகரம் வரை வந்துள்ளது.

ஏறுவதற்கு ஆக சிரமமான சிகரங்களில் ஒன்றாக வின்சன் விளங்குகிறது. கடும் குளிர், எளிதில் கணிக்க முடியாதிருக்கும் அன்டார்க்டிக்கா பருவநிலை போன்றவை அதற்கான காரணங்கள்.

கவிதாவின் மலையேற்றப் பயணம் இம்மாதம் மூன்றாம் தேதி தொடங்கியதாக என்டிடிவி ஊடகம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்