சூடுபிடிக்கும் இந்தியாவின் மாற்று எரிபொருள் கார் விற்பனை

சூடுபிடிக்கும் இந்தியாவின் மாற்று எரிபொருள் கார் விற்பனை

1 mins read
9e894318-e4dc-4b69-a18d-088a9f8cd980
மாற்று எரிபொருளில் இயங்கும் கார்களின் விற்பனை பெட்ரோலில் இயங்குபவற்றை விஞ்சியிருப்பதாக வாகன விநியோகச் சங்கங்கள் சம்மேளனம் தகவல் வெளியிட்டுள்ளது. - படம்: டெக்கான் ஹெரால்ட்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவில் முதன்முறையாக மாற்று எரிபொருளில் இயங்கும் கார்களின் விற்பனை பெட்ரோலில் இயங்குபவற்றை விஞ்சியிருக்கிறது.

கார்கள் போன்ற பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இது பொருந்தும். அந்நாட்டின் வாகன விநியோகச் சங்கம் திங்கட்கிழமை (செப்டம்பர் 7) இத்தகவலை வெளியிட்டது.

இ20 பெட்ரோல்

இந்தப் போக்கு, மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதற்கான செலவு குறைவாக இருப்பதை எடுத்துக்காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ20 பெட்ரோலுக்கு மாறிக்கொள்வது தொடர்பில் நிலவும் நிச்சயமற்ற சூழலால் இந்தப் போக்கு காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

அதனால் வாடிக்கையாளர்கள் சிஎன்ஜியில் ஓடும் வாகனங்கள், மின்சார வாகனங்கள், மின்சாரம் மற்றும் பெட்ரோல் இரண்டிலும் ஓடும் வாகனங்களை வாங்குவது குறித்து ஆலோசிப்பதாக வாகன விநியோகச் சங்கங்கள் சம்மேளனம் தெரிவித்தது. அது, இந்தியாவின் முன்னணி கார், இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களைப் பிரதிநிதிக்கிறது.

இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொள்ள இந்தியா இ20 பெட்ரோலுக்கு மாறுகிறது. அதில் 20 விழுக்காடு எத்தனால் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது. அதனால் அதுகுறித்து வாடிக்கையாளர்களிடையே கண்டனம் எழுந்தது.

இந்தியாவில் விற்பனையாகும் 42 விழுக்காட்டுப் பயணிகள் வாகனங்கள் மாற்று எரிபொருளில் இயங்குபவை. 41 விழுக்காட்டு வாகனங்கள் பெட்ரோலில் இயங்குகின்றன என்று வாகன விநியோகச் சங்கங்கள் சம்மேளனம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாகார்வாகனம்விற்பனைபெட்ரோல்கச்சா எண்ணெய்