இந்தியாவின் முதல் எல்என்ஜி ரயில் சேவை தொடக்கம்

இந்தியாவின் முதல் எல்என்ஜி ரயில் சேவை தொடக்கம்

படம்: சுவராஜ்யா

28 Sep 2026 - 6:20 pm

1 mins read

அலகாபாத்: நாட்டின் முதலாவது எல்என்ஜி (LNG - திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு) இயங்குதள ரயிலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் இந்தியாவின் இந்த முதல் அதிநவீன ரயில் இயக்கத்தை தொடக்கி வைத்ததுடன், அகமதாபாத் கோட்டத்தில் ரூ.1,542 கோடிக்கும் அதிகமான செலவில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு உள்கட்டமைப்பு, பாதுகாப்பு ரயில்வே திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டி, சில பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இந்தப் புதிய எல்என்ஜி ரயிலானது டீசல், எல்என்ஜி ஆகிய இரண்டிலும் இயங்கும் ‘இரட்டை எரிபொருள்’ (Dual-Fuel) அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் மூலம் டீசல் பயன்பாடு ஏறக்குறைய 40 விழுக்காடு வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது எரிபொருள் செலவைக் குறைப்பதோடு மட்டுமன்றி, கரியமில வாயு, நைட்ரஜன் ஆக்சைட் போன்ற நச்சு வாயுக்களின் உமிழ்வையும் பெருமளவில் கட்டுப்படுத்தும்.

ரயில்வே துறையில் மாற்று எரிபொருள் பயன்பாடு, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கான சில திட்டங்களையும் இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்
இயற்கை எரிவாயுரயில்அகமதாபாத்குஜராத்அமித்ஷாஎரிபொருள்டீசல்