தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் ஆந்திராவில் தொடக்கம்

1 mins read
cd54ee2e-089e-4fea-9eb0-e624f956b950
டெல்லியில் நடைபெற்ற இந்திய மைனிங் மாநாட்டில் பங்கேற்ற  ஹனுமா பிரசாத், இந்த தங்கச்சுரங்கத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றார். - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் முதல் தனியார் தங்கச்சுரங்கம் விரைவில் தனது உற்பத்தியைத் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் உள்ள ‘டெக்கான் கோல்டு மைன்ஸ்’ மேலாண் இயக்குநர் ஹனுமா பிரசாத் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரே தங்கச்சுரங்க நிறுவனம் இது. ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தை அடுத்துள்ள ஜொன்னகிரியில் நாட்டில் முதல் தனியார் தங்கச்சுரங்கத்தை அமைக்கும் பணியை ‘ஜியோ மைசூர் சர்வீசஸ்’ என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் குறிப்பிடத் தக்க பங்குகளை டெக்கான் கோல்டு மைன்ஸ் தன்வசம் கொண்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற இந்திய மைனிங் மாநாட்டில் பங்கேற்ற அவர், இந்தத் தங்கச்சுரங்கத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றார்.

இந்தியா ஆண்டுதோறும் ஏராளமான டன் தங்கத்தை இறக்குமதி செய்வதாகக் குறிப்பிட்ட அவர், கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக அதிக அளவு தங்கம் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது என்றார்.

“இந்தியாவின் தங்க உற்பத்தி தற்போது 1.5 டன்னாக உள்ளது. புதிய சுரங்கம் முழுமையாகச் செயல்படத் தொடங்கியதும் கூடுதலாக ஒரு டன் தங்கம் கிடைக்கும்,” என்றார் ஹனுமா பிரசாத்.

குறிப்புச் சொற்கள்