தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$700 பில்லியன் டாலரைத் தாண்டிய இந்திய அந்நிய செலாவணி கருவூலம்

1 mins read
a1a34534-cf2e-497a-8f2d-205eb0242ba2
செப்டம்பர் 12ஆம் தேதி வரையிலான வாரத்தில் நிதியிருப்பு $4.698 பில்லியன் வளர்ச்சிக் கண்டதாக இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் தரவுகள் காட்டுகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

கோல்கத்தா: இந்தியாவின் அந்நிய செலாவணிகருவூலம் $700 பில்லியன் டாலர் இலக்கைத் தாண்டியுள்ளது. செப்டம்பர் 12ஆம் தேதி வரையிலான வாரத்தில் நிதியிருப்பு $4.698 பில்லியன் வளர்ச்சிக் கண்டதாக இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் தரவுகள் காட்டுகின்றன.

11.5 மாத இறக்குமதிகளால் நிதியிருப்பில் $702.966 பில்லியன் டாலர் சேர்ந்துள்ளது.

நிதியிருப்பின் ஆகப் பெரிய அளவில் பங்குவகிக்கும் அந்நிய செலவாணிச் சொத்துகள் $2.537 பில்லியன் டாலரிலிருந்து $587.014 டாலராகப் பெருகியது.

யுரோ, பவுண்ட் ஸ்டெர்லிங், யென் என உலக நாடுகளின் மதிப்பில் உள்ள சொத்துகளின் மதிப்பீடுகள் மாறியதால் அந்நிய செலாவணி சொத்துகள் பெரிய அளவில் அதிகரித்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க அரசாங்கம் 50 விழுக்காட்டு வரியை விதித்ததிலிருந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி கண்டது.

செப்டம்பர் 12ஆம் தேதி நிலவரப்படி, ஒரு அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 88.12.

குறிப்புச் சொற்கள்