இந்தியாவின் ஐஏஎஸ் தொழிற்சாலை: வெற்றியாளரை உருவாக்கும் மதோபட்டி கிராமம்

1 mins read
8a56ae59-b0ab-4430-a3a8-321a5f973c78
கடந்த நூற்​றாண்​டில் மட்டும் மதோபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்​எஸ் மற்​றும் ஐஎப்​எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். - படம்: இணையம்

லக்னோ: இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான அரசு உயர் அதிகாரிகளை உருவாக்கிய தொழிற்சாலை எனப் பெயர் பெற்றுள்ளது மதோபட்டி கிராமம்.

இது, உத்தரப் பிரதேசத்​தின் கிழக்குப் பகு​தி​யில் உள்ள ஜவுன்​பூர் மாவட்​டத்​தில் உள்ள சிறு கிராமமாகும்.

கடந்த நூற்​றாண்​டில் மட்டும் இக்கிராமத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்​எஸ் மற்​றும் ஐஎப்​எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எனவே, இந்​தி​யா​வின் ஐஏஎஸ் தொழிற்​சாலை என்ற புனைப்பெயரை மதோபட்​டி பெற்​றுத் தந்​துள்​ளது.

கடந்த ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஜாதோபட்டி கிராமத்தைச் சேர்ந்த முஸ்​தபா ஹுசைன் என்பவர், மாதோபட்டி கிராமத்​தில் இருந்து தேர்வான முதல் ஐஏஎஸ் அதி​காரி என்ற சாதனையைப் படைத்​தார்.

இதனால் நினைத்தாலும் நாமும் சாதிக்க முடியும் என்ற உத்வேகம் பெற்ற மதோபட்டி இளையர்கள் பலரும் குடிமைப் பணித் தேர்​வில் கவனம் செலுத்தத் தொடங்கினர்.

இத்தனைக்கும் இக்கிராமத்தில் குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி மையம் எது​வுமே இல்லை. எனினும் ஏற்​கெனவே தேர்வில் வெற்றிபெற்று பதவி​யில் உள்ள அதிகாரிகள் கிராம இளையர்களுக்குப் புத்​தகங்​கள், குறிப்​பு​கள் மற்​றும் உத்​தி​கள் மூலம் வழி​காட்​டு​தல் வழங்கி வரு​கின்​றனர்.

இதனால் பள்​ளிப் பருவம் முதலே குடிமைப் பணித் தேர்​வுக்குத் தயா​ராகத் தொடங்கி விடு​கின்​றனர் மதோபட்டி குழந்தைகள்.

ஐஏஎஸ் அதிகாரிகளாக உருவெடுக்க இயலாதவர்கள் இஸ்​ரோ, பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்​ளிட்ட மற்ற இடங்களில் பணி வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்