இந்தியாவின் பால் உற்பத்தி அதிகரிப்பு

இந்தியாவின் பால் உற்பத்தி அதிகரிப்பு

1 mins read
f452e4c8-b7a3-4917-a628-4753d03547d8
எதிர்வரும் 2047ஆம் ஆண்டு இந்தியாவின் பால் தேவையானது, 480 முதல் 606 மெட்ரிக் டன்னாக இருக்கும் என மத்திய நிதியமைச்சு கணித்துள்ளதாக  எம்.எல்.ஜாட் கூறினார். - கோப்புப்படம்: ராயல் ஃபார்ம்ஸ்

புதுடெல்லி: இந்தியாவின் பால் உற்பத்தி 247 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது என இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த 1950களில் நாட்டின் மொத்த பால் உற்பத்தியானது, 17 மில்லியன் டன்னாக இருந்தது என்றும் தற்போது அது பன்மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அக்கழகத்தின் தலைமை இயக்குநர் எம்.எல்.ஜாட் கூறியுள்ளார்.

தேசிய அளவில் பால் உற்பத்தியில் பஞ்சாப், ஹரியானா முதலிடம் வகிப்பதாக ஹரியானாவில் நடைபெற்ற வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 2047ஆம் ஆண்டு இந்தியாவின் பால் தேவையானது, 480 முதல் 606 மெட்ரிக் டன்னாக இருக்கும் என மத்திய நிதியமைச்சு கணித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டின் மொத்த பால் உற்பத்தியில் நாட்டு எருமைகளின் பங்கு 31.8 விழுக்காடு ஆகும்.

கலப்பின மாடுகள் 30.80%, நாட்டு மாடுகள் 11.20%, வகைப்படுத்தப்படாத மாடுகள் 9.64%, வகைப்படுத்தப்படாத எருமைகள் 11.97%, ஆடுகள் 3.32%, வெளிநாட்டு மாடுகள் 1.89% பங்களிப்பதாக திரு எம்.எல்.ஜாட் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்