புதுடெல்லி: இலோன் மஸ்க்குடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து தாம் கலந்துரையாடியதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இவ்வாண்டு தொடக்கத்தில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் மஸ்க்கைச் சந்தித்துப் பேசியபோது கலந்துரையாடப்பட்டவை பற்றியும் அவரிடம் கலந்துரையாடியதாகப் பிரதமர் மோடி கூறினார்.
தொழில்நுட்பம், புத்தாக்கம் தொடர்பான உத்தேச ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து மஸ்க்குடன் பேசியதாக அவர் தெரிவித்தார்.

