இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் ஊடக, பொழுதுபோக்குத் துறை

2 mins read
0780279e-6ecb-4f9a-a0e7-3be53827ae8c
இந்திய ஊடகத் துறை எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் நூறு பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  - சித்திரிப்புப் படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்றாக ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை உருவெடுத்துள்ளது.

எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் நூறு பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளியில் ரீதியாக ஊடகம், பொழுதுபோக்குத் துறையானது, வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைத் தருவதாக உள்ளது என்றும் கடந்த பத்து ஆண்டுகளில் இத்துறையின் மொத்த மதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

“‘அனிமேஷன்’ போன்ற மற்ற தொழில்நுட்பச் சேவைகளைத் திறமையான பணியாளர்கள் அளிக்கின்றனர்.

“அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ்-எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி (ஏவிஜிசி AVGC-XR) துறையின் வளர்ச்சி நாட்டின் முக்கியமான உந்துசக்தியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

“இதன் மூலம் இந்தியாவின் படைப்புப் பொருளியல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் கட்டத்தில் நுழைந்துள்ளது. நாட்டின் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை படைப்பு தொழில்நுட்பம், மின்னிலக்க உள்ளடக்க உற்பத்திக்கான உலகளாவிய மையமாக வளர்க்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

“இதற்காக ஒரு விரிவான தேசிய உத்தி உருவாக்கப்படும். இதன் பொருட்டு நிறுவப்பட்ட ஏவிஜிசி ஊக்குவிப்பு பணிக்குழுவின் வேகம் அதிகரித்துள்ளது,” என்று துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த பத்து ஆண்டுகளில் ஏறக்குறைய 20 லட்சம் நேரடி, மறைமுக வேலைகளை இந்தத் துறை உருவாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்தத் துறை உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகள் மூலம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிக்க முடியும் என்றும் மதிப்பிட்டுள்ளது.

மேலும், இந்திய படைப்பாற்றல் தொழில்நுட்ப நிறுவனம், நெட்ஃப்ளிக்ஸ், கூகல், மைக்ரோசாஃப்ட், என்விடியா மற்றும் பிற நிறுவனங்களுடன் உலகளாவிய கூட்டாண்மை மூலம் படைப்பாற்றல் கல்வியை மறுவடிவமைத்து, உலகத்தரம் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகிறது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்