இந்தியாவின் சூரிய மின்சக்தி உற்பத்தி பன்மடங்கு அதிகரிப்பு

இந்தியாவின் சூரிய மின்சக்தி உற்பத்தி பன்மடங்கு அதிகரிப்பு

1 mins read
3d8475c6-3dee-456e-8078-091b6ea37596
அடுத்து 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் என்ற இலக்கை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். - கோப்புப் படம்: டாட்டா பவர்

புதுடெல்லி: இந்தியாவின் சூரிய மின்சக்தி உற்பத்தி திறன் 2.8 கிகாவாட்டில் இருந்து 155 கிகாவாட்டாக அதிகரித்துள்ளதாக இந்தியச் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளில் இந்த அபார வளர்ச்சி சாத்தியமாகி உள்ளதாக தமது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஏறக்குறைய 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சூரிய மின்சக்தி ஆற்றலால் ஒளிர்வதாகத் தெரிவித்துள்ள திரு ஷெகாவத், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் சேர்ந்து விவசாயத் துறையிலும் சூரிய மின்சக்தி ஆற்றல் திறன் இரட்டிப்பாகி உள்ளது என்றும் இது முன்னேற்றத்திற்கான சான்றாகும் என்றும் கூறியுள்ளார்.

“இந்திய விவசாயிகளை இனி உணவு வழங்குபவர்கள் என்று மட்டும் கூற இயலாது. அவர்கள் இனி ஆற்றலை உருவாக்குபவர்கள்.

“ஒவ்வொரு கூரையையும் சூரிய ஆற்றலால் இயங்கச் செய்யவும் ஒவ்வொரு வீட்டையும் ஓரு ஆற்றல் மையமாக மாற்றவும் ஒவ்வொரு வயலையும் ஆற்றல் மையமாக மாற்றவும் இந்தியா உறுதி பூண்டுள்ளது,” என்று திரு ஷெகாவத் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து 500 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க உற்பத்தித் திறன் என்ற இலக்கை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்