இந்தியாவின் கரும்பு உற்பத்தி 44% அதிகரிப்பு

1 mins read
f772dcb4-1581-47fd-9069-9d50ce7d01b8
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் கரும்பு உற்பத்தி சீராக அதிகரித்துள்ளதாக அமைச்சர் சிவராஜ் குறிப்பார். - படம்: பொன்சுக்ரோ

புதுடெல்லி: இந்தியாவின் கரும்பு உற்பத்தி 44% அளவுக்கு அதிகரித்துள்ளது.

இத்தகவலை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் கரும்பு உற்பத்தி சீராக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புதுடெல்லியில் நடைபெற்ற வேளாண் வணிக உச்சி மாநாடு 2025இல் கலந்துகொண்டு பேசிய அவர், விவசாயிகள் தங்கள் விளைபொருள்களுக்கு நியாயமான விலையைப் பெறுவதை உறுதி செய்வதற்கான ஒரு நல்லதோர் ஏற்பாட்டை அரசாங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது என்றார்.

விவசாயிகள் அதிக தரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதைச் சாதிக்க விவசாயிகளுக்குப் போதுமான தகவல்கள், உதவிகள் தேவை என்றார்.

விவசாயிகள்தான் அறிவியலின் ஆகச்சிறந்த பயிற்சியாளர்கள் என்றார் அமைச்சர்.

ஒரு ஹெக்டருக்கும் குறைவான நிலங்களை வைத்துள்ள உரிமையாளர்களுக்கான ஒருங்கிணைந்த பண்ணை மாதிரிகள், மதிப்புக்கூட்டல், மீன்-கால்நடைகளில் பல்வகைப்படுத்தல் மற்றும் உயிரி உள்ளீடுகள் மீதான கடுமையான விதிமுறைகள் தற்போது குறைக்கப்பட்டுள்ளன என்று திரு சௌஹான் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்