தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொழில்நுட்பக் கோளாற்றால் 40 நிமிடங்கள் வானில் வட்டமிட்ட இண்டிகோ விமானம்

1 mins read
b791240d-15f5-4af3-b2db-753905109bfd
திருப்பதியிலிருந்து ஹைதராபாத் செல்ல வேண்டிய விமானம், மீண்டும் திருப்பதிக்கே திரும்பியது. - கோப்புப் படம்: ஊடகம்
multi-img1 of 2

ஹைதராபாத்: திருப்பதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) ஹைதராபாத் நகருக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம் ஒன்று, தொழில்நுட்பக் கோளாற்றால் ஏறத்தாழ 40 நிமிடங்கள் வானில் வட்டமிட நேர்ந்தது.

‘6E 6591’ விமானம் பின்னர் பாதுகாப்பாகத் திருப்பதி விமான நிலையத்துக்குத் திரும்பியது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 7.42 மணியளவில் திருப்பதியிலிருந்து புறப்பட்ட அந்த ஏர்பஸ் ஏ32நியோ வகை விமானம் இரவு 8.34 மணியளவில் மீண்டும் திருப்பதி விமான நிலையத்துக்கே திரும்பியதாக ‘ஃபிளைட்ரேடார்24’ இணையத்தளம் குறிப்பிடுகிறது.

வெங்கடகிரி நகர் வரை சென்ற விமானம் பின்னர் புறப்பட்ட இடத்துக்கே திரும்பியதை அந்த இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள விமானப் பாதையின் படம் காட்டுகிறது.

அந்த விமானம் திருப்பதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7.20 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு ஹைதராபாத்தில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்ததாக இண்டிகோ இணையத்தளம் கூறியது.

சம்பவம் குறித்த அதிகாரபூர்வ அறிக்கையை அது இன்னும் வெளியிடவில்லை

குறிப்புச் சொற்கள்