இந்தோ, திபெத் எல்லை காவல்படை திட்டம்: இந்திய-சீன எல்லையில் 10 மகளிர் கண்காணிப்பு மையம்

2 mins read
71a00f4c-dc37-4478-bc44-3994213db709
இந்​தியா, சீனா இடையேயான 3,488 கிலோ மீட்டர் தூர எல்​லைப் பகு​தியை கண்காணிக்​கும் பொறுப்​பில் இந்தோ - திபெத் எல்லை காவல்படை ஈடு​பட்​டுள்​ளது. - படம்: ஊடகம்

ஸ்ரீநகர்: இந்திய எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.

இந்தோ, திபெத் எல்லை காவல் படை இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்​தியா- சீனா இடையேயான எல்​லைப் பகு​தி​யில் 10 மகளிர் கண்​காணிப்பு மையங்​களை அமைக்​க உள்​ள​தாக இந்தோ திபெத் எல்லை காவல்படை தெரி​வித்​துள்​ளது.

இப்படையின் 64வது எழுச்சி தினம் ஜம்​மு​வில் கொண்டாடப்பட்டது.

இந்​நிகழ்ச்​சி​யில் அதன் தலைமை இயக்​குநர் பிர​வீன் குமார் கலந்துகொண்டு பேசியபோது, இருநாடுகளுக்கு இடையேயான எல்​லை​யில் முன்பு 180 கண்​காணிப்பு மையங்​கள் அமைக்​கப்​பட்​டிருந்​ததாகவும் அந்த எண்ணிக்கை தற்​போது 215ஆக உயர்த்​தப்​பட்​டுள்​ளதாகவும் தெரிவித்தார்.

ஏழு புதிய பட்​டா​லியன்​கள் அமைக்​கப்​பட்​டதன் மூலம் இத்​திட்​டம் வலு​பெற்​றுள்​ளதாகக் குறிப்பிட்ட அவர், இதன் மூலம் எல்​லைப் பகுதி கண்​காணிப்பு மேம்​பட்​டுள்​ளது என்றார்.

மேலும் 41 கண்காணிப்பு மையங்​களை அமைக்க திட்​ட​மிட்​டுள்​ளதாகவும் அவற்றுள் பத்து மையங்​களில் முழு​வதும் பெண் காவலர்​கள் மட்டுமே பணி​யாற்​று​வர் என்றும் அவர் தெரிவித்தார்.

“லடாக்​கில் உள்ள லூகுங் மற்​றும் இமாச்​சலப் பிரதேசத்​தின் தாங்கி ஆகிய இடங்​களி​லும் பெண் காவலர்​கள் பணி​யாற்​றும் மையங்​கள் அமைக்​கப்​படும்.

“எல்​லைப் பகு​தி​யில் மேலும் 8 மையங்​களில் பெண்​கள் பணி​யாற்​று​வர். பயிற்சி மையங்​களில் வழங்​கப்​படும் பயிற்​சிகள், மலைப் பகு​தி​களில் பணி​யாற்​றும் வகை​யில் மேம்​படுத்​தப்​படும்,” என்றார் திரு பிர​வீன்​ குமார்​.

இந்​தியா, சீனா இடையேயான 3,488 கிலோ மீட்டர் தூர எல்​லைப் பகு​தியை கண்காணிக்​கும் பொறுப்​பில் இந்தோ - திபெத் எல்லை காவல்படை ஈடு​பட்​டுள்​ளது. இதில் ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வீரர்களும் அதி​காரி​களும் பணி​யாற்​றுகின்​றனர். 9,000 அடி முதல் 14,000 அடி வரை​யுள்ள மலைப் பகு​தி​களில் இவர்​கள் பாதுகாப்புப் பணியை மேற்​கொள்​கின்றனர்.

குறிப்புச் சொற்கள்