தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிபிஎஸ்இ பள்ளிகளில் கண்காணிப்புக் கருவி பொருத்துவது இனி கட்டாயம்

2 mins read
23aa37cf-9eb4-48e4-b095-a295d02de28f
சிபிஎஸ்இ பள்ளிகளின் நிா்வாக நடைமுறை விதிகளில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக அதன் செயலர் ஹிமான்ஷு குப்தா கூறினார். - படம்: இந்து நாளிதழ்

புதுடெல்லி: இந்தியாவில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின்கீழ் (சிபிஎஸ்இ) இயங்கும் பள்ளிகளில் கண்காணிப்புக் கருவிகள் பொருத்துவது இனி கட்டாயமாக்கப்படும் என அவ்வாரியத்தின் செயலா் ஹிமான்ஷு குப்தா கூறியுள்ளார்.

மேலும், அவற்றில் ஒலியுடன் காட்சிகள் பதிவு செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகுமெனவும் அவர் கூறினார்.

இதுதொடா்பாக சிபிஎஸ்இ பள்ளிகளின் நிா்வாக நடைமுறை விதிகளில் திருத்தம் செய்யப்படவுள்ளது என்றும் அதிகாரி குறிப்பிட்டார்.

மாணவா்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதே பள்ளிகளின் முதல்கட்ட பணியாகும் எனக் கூறிய திரு குப்தா, அவ்வகையில் மாணவா்களின் பாதுகாப்பு இரு அம்சங்களின்கீழ் உறுதி செய்யப்பட வேண்டும் என்றார்.

“சமூக விரோத கும்பலிடமிருந்து பாதுகாப்பது, கேலி, பகடிவதை என மாணவா்களை அச்சுறுத்தலில் இருந்தது தற்காப்பது போன்ற அம்சங்களைப் பள்ளிகள் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும்.

“இதற்கு நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்துவதைக் கட்டாயமாக்கும் பொருட்டு பள்ளி நிா்வாக நடைமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என அவர் இதுகுறித்து மேலும் தெரிவித்தார்.

மேலும், “பள்ளி நுழைவாயில்கள், வெளியேறும் பகுதிகள், படிக்கட்டுகள், வகுப்பறைகள், நூலகங்கள், விளையாட்டு மைதானங்கள், உணவிடங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கண்காணிப்புக் கருவி பொருத்துவதுடன் அவற்றில் ஒலியுடன் காட்சிகள் பதிவாவதை உறுதிப்படுத்த வேண்டும். அக்காட்சிகளைக் குறைந்தது 15 நாள்களுக்குச் சேமித்து வைக்கும் வசதி இருக்க வேண்டும். 15 நாள்கள்வரை அதிகாரிகள் அதில் ஆய்வு செய்யும் வகையிலும் அதன் தரவுகளைப் பாதுகாக்க வேண்டும்,” என அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்