தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய காவல்துறைக்கு அனைத்துலக ஒலிம்பிக் சங்கம் கண்டனம்

1 mins read
23af37c5-b2cc-47fe-b33a-35f726dbae33
படம்: ராய்ட்டர்ஸ் -

இந்திய மல்யுத்த வீரர்கள் மீது அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைக்கு அனைத்துலக ஒலிம்பிக் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மல்யுத்த வீரர்கள் செய்து வரும் போராட்டத்திற்கு அது ஆதரவும் தெரிவித்துள்ளது. வீரர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் அது கேட்டுக்கொண்டது.

இந்­திய மல்யுத்த சம்­மே­ள­னத் தலை­வரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷ­ன் சிங்குக்கு எதி­ரான பாலி­யல் குற்­றச்­சாட்­டில் நட­வ­டிக்கை எடுக்­கக் கோரி மல்யுத்த வீரர், வீராங்­க­னை­கள் கடந்த சில வாரங்களாக டெல்லியில் போராட்­டம் நடத்தி வந்­த­னர்.

மல்யுத்த வீரர்கள் மே 28 அன்று இந்தியாவில் புதிதாக திறக்கப்பட்ட நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத்தை நோக்கி பேரணியாகச் சென்­ற­னர்.

அவர்களை காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சாக்‌சி மாலிக், பஜ்ரங் பூன்யாவும் இருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அந்நாள் மாலையே விடுவிக்கப்பட்டனர்.

இருப்பினும் அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளார்.

மே 30 அன்று தாங்கள் இந்தியாவிற்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாகவும் மல்யுத்த வீரர்கள் மிரட்டினர்‌. நாட்டின் குடியரசுத் தலைவர் அல்லது பிரதமரிடம் பதக்கங்களைத் திருப்பி தரப்போவதாகவும் கூறியுள்ளனர்.

அரசாங்கம் இன்னும் 5 நாள்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மல்யுத்த வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்