அபுதாபி மீது ஈரான் தாக்குதல்; இந்தியர் படுகாயம்

அபுதாபி மீது ஈரான் தாக்குதல்; இந்தியர் படுகாயம்

படம்: ஏஎஃப்பி

04 Mar 2026 - 9:53 pm

1 mins read

அபு தாபி: ஐக்கிய அரபு சிற்றரசுகளின் தலைநகர் அபுதாபியின் விமான நிலையம் அருகில் ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய நாட்டைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த என். ராஜேஸ்வர ராவ் கடந்த ஓராண்டாக அபுதாபி விமான நிலையத்தில் துப்பரவுப் பணியாளராக வேலை செய்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அபுதாபி விமான நிலையத்தின் அருகில் ஈரான் நடத்திய தாக்குதலில் ராஜேஸ்வர ராவ் உள்ளிட்ட அங்கு பணிபுரியும் சில ஊழியர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் சிக்கியுள்ள தங்களது மகனை உடனடியாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராஜேஸ்வர ராவ்வின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
காயம்அபுதாபிதாக்குதல்ஈரான்