புதுடெல்லி: இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டினரின் விரைவில் காலாவதியாகவுள்ள அனைத்து விசாக்கள், இ-விசாக்களும் இலவச அடிப்படையில் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படும் என்று துபாயில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிப்ரவரி 28ஆம் தேதிக்குப் பிறகு அவர்களின் பயணம் தடைபட்டிருந்தால் அனுமதிக்கப்பட்ட காலத்தைவிடக் கூடுதலாக தங்கியதற்காக அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படாது.
விமானப் போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் நாட்டிலிருந்து கிளம்பலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

