புதுடெல்லி: மத்திய கிழக்கில் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ளதால், டெல்லி - டெல் அவிவ் இடையிலான தனது விமானச் சேவைகளை மே 31ஆம் தேதிவரை ஏர் இந்தியா நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.
ஏர் இந்தியா அறிவிப்பால் இஸ்ரேலில் வசிக்கும் ஏறக்குறைய 40,000 இந்தியர்கள் இந்த அறிவிப்பால் கவலையடைந்துள்ளனர்.
அவசரத் தேவைக்காகவோ அல்லது போர் அச்சம் காரணமாகவோ இந்தியா திரும்ப நினைப்பவர்கள் தற்போது தரைவழியாக ஜோர்தான் அல்லது எகிப்திற்குச் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் பயணம் செய்யவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு கருதி உலகின் பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் இஸ்ரேலுக்கான சேவையை ரத்து செய்துள்ள நிலையில், சில இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மட்டுமே தற்போது இயங்கி வருகின்றன.
தூதரகம் நடவடிக்கை
இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம் அங்குள்ள இந்தியர்களுக்கு உதவ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதன்படி, 24 மணி நேர அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள இந்தியர்களைப் பதிவு செய்யும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கான இந்தியத் தூதர் ஜே.பி. சிங்கும் தூதரகக் குழுவினரும் சனிக்கிழமையன்று (ஏப்ரல் 4) இஸ்ரேல் முழுவதும் உள்ள இந்தியத் தொழிலாளர்கள், மாணவர்களுடன் காணொளி வாயிலாகப் பேசி, அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
ஈரான்- இஸ்ரேல் இடையே நேரடியாகப் போர் மூண்டுள்ளதால், வளைகுடாப் பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக, வான்வழிப் போக்குவரத்து, கடல்வழி எரிசக்தி விநியோகம் பெரும்பாதிப்புக்குள்ளாகி உள்ளதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

