தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2040ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டம்

1 mins read
a58126ed-a175-4098-9364-2f5723e960be
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் நாராயணன். - படம்: ஊடகம்

ராஞ்சி: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோடி 2040ஆம் ஆண்டுக்குள் இந்தியர்களை நிலவில் தரையிறங்க வைக்கும் திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். மேலும், வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்கான ‘வீனஸ் ஆர்பிட்டர் மிஷன்’ (VOM) திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது,” என்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், புதன்கிழமை (அக்டோபர் 15) நடைபெற்ற பிர்லா தொழில்நுட்பக் கல்லூரியின் 35வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற திரு நாராயணன் கூறினார்.

இந்தியாவிற்கான விண்வெளி நிலையத்தை உருவாக்கும் திட்டத்தின்படி, ‘பாரதிய அந்திரிக்ஷ் நிலையம்’ 2035ஆம் ஆண்டில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கான முதல் கட்ட தொகுதிகள் 2027ஆம் ஆண்டிலேயே விண்வெளியில் கட்டமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ககன்யான்’ திட்டத்தில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்குமுன், ஆளில்லாத மூன்று பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அதன்படி ‘வியோம்மித்ரா’ ரோபோ இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பயணத்தை மேற்கொள்ள உள்ளது. அடுத்த ஆண்டு மேலும் இரண்டு ஆளில்லாத பயணங்கள் நடைபெறும். தொடர்ந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் 2027 முதல் காலாண்டில் சாத்தியமாகும் என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்