தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிஎஸ்எல்வி உந்துகணை விண்ணில் பாயத் தயார்

1 mins read
3554feda-96b9-49ed-ab38-fdec8a70d9a7
பி.எஸ்.எல்.வி. சி-60 உந்துகணை இம்மாதம் 30ஆம் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி. சி-60 உந்துகணை விண்வெளியில் பாய்ச்சுவதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இம்மாதம், 30ஆம் தேதி அந்த ஏவுகணை விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ எனும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.

இந்த ஏவுகணை, ‘எஸ்.டி.எக்ஸ்.1’, ‘எஸ்.டி.எக்ஸ்.2’ என்ற இரண்டு சிறிய செயற்கைக்கோள்களையும் ஏந்திச் செல்கிறது.

இதற்கிடையே தனது கனவுத் திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ தீவிரமாகச் செயல்படுத்திவருகிறது.

அதன்படி வருகிற 2035ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான முன்தயாரிப்புத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் விண்வெளி இணைப்பு எனப்படும் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில் பி.எஸ்.எல்.வி. சி 60 உந்துகணை, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தொழில்நுட்பம், நிலவை ஆய்வு செய்யவும் ஆய்வு மாதிரிகளுடன் பூமிக்கு திரும்ப வரவும் விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு விண்கலன்களைத் தனித்தனியாக விண்வெளிக்கு அனுப்பி, அங்கு இணையச் செய்வதற்கான இந்தச் சோதனை வெற்றி பெற்றால் இதைச் சாதித்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

குறிப்புச் சொற்கள்