பெண் உடல் பற்றி கருத்து தெரிவிப்பதும் பாலியல் குற்றமே

1 mins read
46f3bfc2-b41c-4470-8d4d-d5a5e7f008d2
நீதிமன்றம். - கோப்புப் படம்.

திருவனந்தபுரம்: பெண்ணின் உடலமைப்பு குறித்து கருத்து தெரிவிப்பதும் பாலியல் துன்புறுத்தலின்கீழ் வரும் என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

கேரள மின்சார வாரியத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் பணியில் இருந்தபோது சக பெண் ஊழியரிடம் அவரது உடலமைப்பு குறித்து தவறாகப் பேசியுள்ளார்.

2013 முதல் தன்னைத் தவறாகப் பேசி வருவதாகவும் 2016-17ஆம் ஆண்டில் தவறான முறையில் குறுஞ்செய்திகள், குரல் பதிவுகளை அனுப்பியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் கூறியதை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த ஆடவர் தொடர்ந்த வழக்கை கேரள உயர்நீதிமன்றம் புதன்கிழமை (ஜனவரி 8) தள்ளுபடி செய்தது.

“ஒரு பெண்ணின் உடலமைப்பு ‘நன்றாக இருக்கிறது’ என்று கூறினாலும் அதுவும் பாலியல் துன்புறுத்தலின் கீழ் வரும். எனவே, குற்றம்சாட்டப்பட்டவர் மீது பாலியல் குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது சரியே,” என்று கூறிய நீதிபதி, வழக்கின் இடைக்கால உத்தரவை ரத்து செய்தார்.

குறிப்புச் சொற்கள்