ஜல்லிக்கட்டுக்குத் தடை இல்லை: இந்திய உச்சநீதிமன்றம்

ஜல்லிக்கட்டுக்குத் தடை இல்லை: இந்திய உச்சநீதிமன்றம்

1 mins read
5286c170-6087-438b-9597-29829e89b7f1
படம்: தமிழக ஊடகம்/டுவிட்டர் -

இந்திய உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க மறுத்துள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்தில் எந்தத் தவறும் இல்லை என்றும் அது கூறியுள்ளது.

ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வு வியாழக்கிழமை (மே 18) தீர்ப்பளித்தது.

தமிழக அரசு தாக்கல் செய்த ஆவணங்கள் மனநிறைவு அளிக்கும் வகையில் உள்ளன என்றும் அது எந்த விதிமுறைகளையும் மீறவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

ஜல்லிக்கட்டு, தமிழகக் கலாசத்த்துடன் கலந்துள்ளது என்று நீதிமன்றம் கூறியது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதனை எதிர்த்து தமிழகம் முழுதும் போராட்டங்கள் நடந்தன.

அதன் விளைவாக, தமிழக அரசு சட்டத் திருத்தம் செய்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கியது.

ஆனால், அதனை எதிர்த்து ‛பீட்டா' அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதன்பின்னர் வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஜல்லிக்கட்டுஉச்ச நீதிமன்றம்