ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2ஆம் கட்டமாக தேர்தல் நடைபெறும் 26 தொகுதிகளில் மொத்தம் 310 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். ஶ்ரீநகர் மாவட்டத்தில் மட்டும் 112 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். பட்காம் மாவட்டத்தில் 68, ரஜோரி மாவட்டத்தில் 47, பூஞ்ச் மாவட்டத்தில் 35,ரேசி மற்றும் கந்தெர்பல் மாவட்டங்களில் தலா 24 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டத் தேர்தல் 24 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த 24 தொகுதிகளுக்கு 279 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இறுதியாக மொத்தம் 244 பேர் வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் 2ஆம் கட்ட தேர்தல் செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த மாதம் ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கியது. இந்த வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 5ஆம் தேதி முடிவடைந்தது.