தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜம்மு - காஷ்மீர் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

1 mins read
b88209cc-6eda-41b7-8b21-f155a7a9ed4b
‘இண்டியா’ கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு நிறைவுபெற்றது.  - படம்: இபிஏ

புதுடெல்லி: எதிர்வரும் ஜம்மு - காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி ஒன்பது பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதேபோல், தேசிய மாநாட்டுக் கட்சியும் செவ்வாய்க்கிழமை இரவு 32 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதனிடையே பாஜக 29 பேர் கொண்ட மூன்றாவது பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறவிருக்கிறது.

செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இதில் ‘இண்டியா’ கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு நிறைவுபெற்றது.

அதன்படி, காங்கிரஸ் 32 இடங்களிலும், தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களிலும் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளன.

‘இண்டியா’ கூட்டணியில் உள்ள பிற கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜம்மு - காஷ்மீர் தேசிய பாந்தர்ஸ் கட்சி தலா ஓர் இடத்திலும் போட்டியிடுகின்றன.

பாஜக ஏற்கெனவே 44 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சில நாள்களுக்கு முன்னர் வெளியிட்டது. இந்நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் 10 வேட்பாளர்களின் பெயர் பட்டியலையும், மூன்றாம் கட்ட தேர்தலில் போட்டியிடவிருக்கும் 19 வேட்பாளர்களின் பெயர் பட்டியலையும் தற்போது அது வெளியிட்டுள்ளது. 

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்