தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவுக்கு இரு புல்லட் ரயில்களைப் பரிசாக வழங்கும் ஜப்பான்

2 mins read
அதிவேக ரயில் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
7b6b5c92-b499-497f-b144-edc80f57a5d6
புல்லட் ரயில். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பயணிகளின் வசதிக்கேற்ப புதிய ரயில்களை அவ்வப்போது இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், அண்மையில் இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன, பல்வேறு மாநிலங்களில் மெட்ரோ ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நவீனமயமாக்கலை நோக்கிச்செல்லும் இந்தியாவில், அடுத்ததாக புல்லட் ரயில்களை இயக்க அந்நாட்டு ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

இந்தியாவும், ஜப்பானும் மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் புல்லட் ரயில்களுக்கான வடிவமைப்புகளை இறுதி செய்து வருகின்றன.

இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப புல்லட் ரயில்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன.

மேலும், தனது புகழ்பெற்ற இரு புல்லட் (ஷின்கான்சென்) ரயில் பெட்டிகளை இந்தியாவிற்கு ஜப்பான் பரிசாக அளிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது நாட்டின் முதல் அதிவேக ரயில் திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும். கட்டுமானத்தில் உள்ள மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதையின் சோதனை, ஆய்வுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அந்த இரு ரயில் பெட்டிகளை ஜப்பான் இந்தியாவிடம் ஒப்ப்டைக்கும் எனக் கூறப்படுகிறது.

தற்போதைய விரைவு ரயில் சேவையைப் பயன்படுத்தும் ஏழு நகரங்களுடன் ஒப்பிடும்போது, ​​இரு முக்கிய நகரங்களுக்கு இடையேயான 500 கி.மீ. தூரத்திற்கு இந்த ரயில் வெறும் இரண்டு மணி நேரத்தில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானின் புல்லட் ரயில் அமைப்பின் அறிமுகம், இந்தியாவின் பொருளியல் வளர்ச்சியை மேம்படுத்துவது மட்டுமல்லாது ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் முயற்சியையும் ஊக்குவிக்கும் எனச் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்