வங்கிக் கணக்கில் தவறுதலாகப் போடப்பட்ட பணத்தை எடுத்துச் செலவிட்டவர் கைது

தமது வங்கிக் கணக்கில் தவறுதலாகச் செலுத்தப்பட்ட பணத்தை எடுத்துச் செலவுசெய்துவிட்டு, பின் அதனைத் திருப்பிச் செலுத்தாத ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.

இச்சம்பவம் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

மேற்கு சிங்பும் மாவட்டத்தைச் சேர்ந்த ஜீத்ராய் சமந்த், 42, என்ற அந்த பீடித் தொழிலாளியின் ஆதார் எண்ணை இன்னொரு பெண்ணின் வங்கிக் கணக்கோடு இணைத்ததே இப்பிரச்சினைக்கு மூலகாரணமாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீமதி லகூரி என்ற அந்தப் பெண் தமது வங்கிக் கணக்கில் இருந்து பணம் மாயமாய் மறைகிறது என்று கடந்த 2022 செப்டம்பரில்

ஜார்க்கண்ட் ராஜ்ய கிராமின் வங்கி மேலாளரிடம் புகாரளித்த பிறகே இது வெளிச்சத்திற்கு வந்தது.

கொவிட்-19 பரவல் கடுமையாக இருந்தபோது அரசாங்க நலத் திட்டங்களைக் கொண்டுசெல்வதற்காக பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டன. ஈராண்டுகளுக்குமுன் அம்மையத்திற்குச் சென்றிருந்தபோதுதான் தமது கணக்கில் அவ்வளவு பணம் இருந்ததை சமந்த் அறிந்தார்.

இதனையடுத்து, மற்றவர்களுக்கு இவ்விவரம் தெரியக்கூடாது என்பதற்காக அம்மைய அதிகாரி ஒருவருக்கு சமந்த் லஞ்சம் கொடுத்தார் என்று காவல்துறைக் கண்காணிப்பாளர் அஷுதோஷ் சேகர் கூறியதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி தெரிவிக்கிறது.

பிறரது பணத்தை எடுத்துச் செலவுசெய்தது குறித்து காவல்துறை தகவல் தெரிவித்தபோது, அப்பணத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தமக்கு அனுப்பி வைத்துள்ளார் என்று தான் நம்புவதாக சமந்த் பதிலளித்துள்ளார்.

முதலாவது கொவிட்-19 முடக்கநிலையின்போது, அரசாங்கம் மக்களுக்குப் பணம் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, திரு சமந்தின் கிராமவாசிகள் அனைவரும் ஆதார் எண் இணைக்கப்பட்ட தங்களது வங்கிக்கணக்குகளில் பணம் போடப்பட்டுள்ளதா என்று சோதித்தனர்.

அப்படிச் சோதித்தபோது தமது கணக்கில் ரூ.112,000 இருந்ததை சமந்த் கண்டார்.

“அதுபற்றி வங்கி மேலாளரிடம் கேட்டபோது, நான் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று அவர் கூறினார். இப்போது என்மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது என் தவறில்லை. எனக்குத் தெரியாமல் என் ஆதார் எண்ணை இன்னொருவருடன் வங்கிக் கணக்குடன் இணைத்துள்ளனர். அதுபற்றி கடந்த ஈராண்டுகளாக வங்கி எனக்குத் தகவல் தெரிவிக்கவும் இல்லை,” என்றார் சமந்த்.

ஆறு குழந்தைகளுக்குத் தந்தையான சமந்த் இப்படி ரூ.2 லட்சம் வரை தமது வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துவிட்டதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

தொடக்கத்தில் சமந்தின் கணக்கில் வெறும் 650 ரூபாய்தான் இருந்தது என்றும் ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் 500 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய்வரை எடுத்துள்ளார் என்றும் காவல்துறை தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!