தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2030க்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை: பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

1 mins read
dae4aeb2-12f9-41e8-a27d-0ee84b49e6e8
நிதிஷ்குமார். - படம்: ஊடகம்

பாட்னா: எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் (2025-2030) ஒரு கோடி இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு அளிக்கத் திட்​ட​மிடப்பட்​டுள்​ள​தாக பீகார் முதல்​வர் நிதிஷ் குமார் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்​தில் வெளியிட்டுள்ள பதிவில், “பீகார் மாநிலத்​தில் இதுவரை 10 லட்​சம் இளைஞர்​களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. இவர்களையும் சேர்த்து ஒட்​டுமொத்தமாக 39 லட்​சம் பேருக்கு வேலை​வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதைத்தொடர்ந்து, 50 லட்​சம் இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு வழங்​கும் இலக்கு படிப்படியாக எட்​டப்​படும். 2030க்குள் ஒரு கோடி இளைஞர்​களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி, இலக்கை இரட்​டிப்​பாக்கவும் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதன் காரணமாகத் தொழில்​துறை பிரிவு​களில் புதிய வேலை வாய்ப்​பு​களை உரு​வாக்​க ஒரு உயர்​மட்​டக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது என்று நிதிஷ் குமார் கூறியுள்​ளார்.

பீகார் தேர்​தல் இந்த ஆண்டு அக்​டோபர் அல்​லது நவம்​பரில் நடை​பெறும் என எதிர்​பார்க்​கப்​படு​ம் நிலையில், இதுகுறித்து தேர்தல் ஆணை​யம் இன்​னும் விவரம் அறிவிக்​காமல் உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்