இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் திறப்பு

இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் திறப்பு

2 mins read
13a84b1c-c099-40f4-95ff-20b3325f8d86
ஜொன்னகிரி தங்​கச் சுரங்​கத்தைத் திறந்துவைத்தார் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. - படம்: இந்து தமிழ் திசை

கர்னூல்: ஆந்​தி​ரப் பிரதேச மாநிலத்தில் ஜொன்​னகிரி தங்​கச் சுரங்​கத்தை முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு புதன்கிழமை (ஜூன் 24) திறந்துவைத்​தார்.

கர்​னூல் மாவட்​டத்தின் துக்​காலி மண்​டலத்தில் உள்ளது ஜொன்னகிரி பகு​தி. அங்குச் செயல்பாட்டுக்கு வந்துள்ள ​புதிய தங்​கச் சுரங்​கம் இந்​தி​யா​வின் முதல் தனி​யார் தங்​கச் சுரங்​கம் ஆகும்.

திறப்புவிழாவில் கலந்துகொண்ட முதல்வர், “ராயல சீமா பகு​தியை ரத்​தின சீ​மா​வாக மாற்​று​ம் நடவடிக்கை ஜொன்​னகிரி​யில் தொடங்க உள்​ளது. இப்​பகு​தியை முன்பு ‘சுவர்​ணகிரி’ என்று அழைத்​தனர்,” என்று குறிப்பிட்டார்.

அசோகர் காலத்துச் சாசனங்​கள்

அக்காலத்தில் அசோகச் சக்​கர​வர்த்​தி​யின் நான்காவது தலைநகரமாக ஜொன்னகிரி விளங்கியது என்றார் திரு நாயுடு.

“பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இங்குச் சாலைகளில் ரத்​தினக் கற்​கள், தங்​கம் போன்​றவற்றைக் கொட்டி விற்பனை செய்ததாக அசோகர் காலத்துச் சாசனங்​கள் தெரிவிக்​கின்​றன,” என்றும் அவர் சொன்னார்.

“ஒரு காலத்​தில் ‘கேஜிஎஃப்’ எனப்படும் கோலார் தங்​கச் சுரங்​கம் குறித்து நாடு முழு​வதும் பரவலாக பேசப்​பட்​டது. ஆனால் இப்​பொழுது ஜொன்​னகிரி குறித்து நாடு முழு​வதும் பேசப்​படு​கிறது. இங்கு ஆண்​டுக்கு ஒரு டன் தங்​கம் வெட்டி, சுத்​தம் செய்​யப்​படும். தொடக்கத்தில் 400 கிலோவாக இருக்கும்; பின்னர் போகப்​போக 1,000 கிலோ என்ற நிலையை எட்டும்,” என்று முதல்வர் நாயுடு கூறினார்.

“தற்போது இங்கு 800 பேர் பணி​யாற்​றுகின்​றனர். விரைவில் புதிதாக 1,500 பேர் நியமனம் செய்​யப்​படு​வர். வருங்காலத்தில் இங்கு ஊழியர்களின் எண்ணிக்கை 5,000ஆக உயரும்,” என்று அவர் தெரிவித்தார்.

ஜொன்​னகிரி ஆந்​தி​ரா​வின் அடையாளமாக மாறும் என்றும் அங்கு நகைக்கடைகள் அமைக்​கப்​படும் என்றும் திரு நாயுடு கூறினார். ஆந்​தி​ரா​வில் தொழில் தொடங்க பலர் முன்வரு​வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மேலும், “இந்தியாவிலேயே மிகப்​ பெரிய ‘டிரோன் சிட்டி’ ஆந்​தி​ரா​வில் அமை​கிறது. விரை​வில் கர்னூலில் உயர் நீதி​மன்றக் கிளை செயல்படவுள்ளது. 2028ல் ராயல சீமாவில் இரும்புத் தொழிற்​சாலை அமை​யும்,” என்றும் அவர் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்