அசாம்: சுற்றுப்பயணிகள் சென்றுகொண்டிருந்த வாகனம் ஒன்றைக் கட்டுக்கடங்காத காண்டா மிருகம் மோதி அதனை கவிழ்க்க முயன்ற சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.
அசாமிலுள்ள மானஸ் தேசிய பூங்காவில் வியாழக்கிழமை இந்தச் சம்பவம் பதிவானது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அச்சுறுத்தப்பட்ட பயணிகள் செய்வதறியாமல் திகைத்திருந்தனர். ஆயினும், சில நிமிடங்களுக்குப் பிறகு சில ஆடவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காண்டா மிருகத்தை விரட்டியதை காணொளி காட்டுகிறது.
பருவமழைக்கான காலகட்டத்தில் காண்டா விலங்குகள், வெள்ளம் நிறைந்த தங்களது இயற்கையான இருப்பிடங்களைவிட்டு வேறு இடங்களை நாடிச் செல்கின்றன.
இதனால் காண்ட மிருகங்கள் அவ்வப்போது மனிதர்களைச் சந்திக்க நேரிடுகின்றன. இத்தகைய இடங்களில் வெளியிடங்களில் திறந்த ஜீப் வாகனங்களில் செல்லும் ஆபத்துகள் பற்றி இணையவாசிகள் கூறி வருகின்றனர்.
காண்டா மிருகங்கள் சுற்றுப்பயணிகளைத் தாக்க வரும் சம்பவங்கள் பிப்ரவரி 2023ல் மேற்கு வங்கத்திலும் டிசம்பர் 2022ல் அசாமிலும் நடந்துள்ளன.