பாஜக எம்எல்ஏமீது பாலியல் புகார்

1 mins read
e4648cc1-cad3-484e-b54f-aed0dff9cbd3
ஆர் ஆர் நகர் தொகுதி பாஜக எம்எல்ஏ என். முனிரத்னா. - படம்: ஊடகம்

பெங்களூரு: இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர்மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

ஆர் ஆர் நகர் தொகுதி எம்எல்ஏவான என். முனிரத்னா கடந்த 2020 மார்ச் மாதத்திலிருந்து ஈராண்டுகளாகத் தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார் என்று ராமநகர மாவட்டம், கக்கலிபுரா காவல் நிலையத்தில் 40 வயதுப் பெண் ஒருவர் புகார்செய்துள்ளார்.

இதனையடுத்து, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் முனிரத்னாவிற்கு நீதிமன்றம் வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 19) முன்பிணை வழங்கியது. ஆயினும், பெங்களூரு மத்திய சிறைச்சாலையிலிருந்து நள்ளிரவுவரை அவர் வெளியேறவில்லை என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்