காஷ்மீர் தேர்தல்: புலம்பெயர்ந்த இந்துக்கள் 40% வாக்களிப்பு

காஷ்மீர் தேர்தல்: புலம்பெயர்ந்த இந்துக்கள் 40% வாக்களிப்பு

1 mins read
9d85e0b3-4bb0-4bfc-ab4f-0b48f3d729ff
ஸ்ரீநகரில் செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் வாக்களிக்கக் காத்திருந்தத மக்கள். - படம்: இந்திய ஊடகம்

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில், காஷ்மீர் இந்துக்களில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் வாக்களித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீரி பண்டிட்டுகள் என்றழைக்கப்படும் அவர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அங்கிருந்து வெளியேறி ஜம்மு உள்ளிட்ட பல பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

அவ்வாறு ஜம்மு-காஷ்மீருக்குப் புலம்பெயர்ந்தவர்களில் 40 விழுக்காட்டினர் வாக்களித்தனர் என்று நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஆணையர் அரவிந்த் கர்விந்த் கர்வானி தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் காஷ்மீரி பண்டிட்டுகளின் கோட்டையாக இருந்த ஹபகடல் தொகுதியில் அதிகபட்சமாக 2,796 வாக்குகளும், லால் சவுக்கில் 909 வாக்குகளும், ஜாதிபாலில் 417 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. செப்டம்பர் 18, 25 ஆகிய தேதிகளில் முதல் இரண்டு கட்டத் தேர்தல் நடந்து முடிந்தன.

அக்டோபர் 1 ஆம் தேதி மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் மொத்தம் 239 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஜம்மு காஷ்மீரில் தேர்தலின்போது எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தல் புதன்கிழமை காலை 7.00 மணிக்கு தொடங்கி மாலை 5.00 மணி வரை நடந்தது.

அதில் 54 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்