தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கறுப்பு வண்ணத்தில் வெளியான காஷ்மீர் நாளிதழ்கள்

1 mins read
5d1bb0cb-bdd3-48bb-9381-af22bae435bf
காஷ்மீரில் சுற்றுப்பயணிகள்மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து கறுப்பு வண்ணத்தில் வெளியான காஷ்மீர் நாளிதழ்களின் முதல் பக்கங்கள். - படம்: ‘எக்ஸ்’ தளம்

ஸ்ரீநகர்: காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சுற்றுப்பயணிகள்மீது ஏப்ரல் 22ஆம் தேதி தாக்குதல் நடத்தினர்.

26 பேரின் உயிரைக் குடித்த அத்தாக்குதலைக் கண்டித்து, ‘கிரேட்டர் காஷ்மீர்’, ‘ரைசிங் காஷ்மீர்’, காஷ்மீர் உஸ்மா’, ‘அப்தாப்’, ‘தய்மீல் இர்ஷாத்’ ஆகிய அம்மாநில ஆங்கிலம், உருது மொழி நாளிதழ்களின் முதல் பக்கங்கள் புதன்கிழமையன்று (ஏப்ரல் 23) கறுப்பு நிறத்தில் வெளியாகின.

கிரேட்டர் காஷ்மீர்’ என்ற ஆங்கில நாளிதழின் முதல் பக்கத்தில், “கொடூரம்: இடிந்தது காஷ்மீர்; காஷ்மீரிகள் துயரம்,” என அச்சிடப்பட்டிருந்தது.

மேலும், “பசும் புல்வெளிகளின் மீது நடத்தப்பட்ட படுகொலை; காஷ்மீரின் ஆன்மாவைக் காப்பாற்ற வேண்டும்,” என்ற தலைப்பில், ஆங்கில நாளிதழ் ஒன்றில் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்