தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.4,081 கோடியில் கேதார்​நாத் கோயிலுக்கு கம்பிவட வண்டி

1 mins read
7d311292-3a37-407e-90ab-127e05791371
உத்​த​ராகண்ட் மாநிலத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது முக்கிய சிவன் தலங்களில் ஒன்றான கேதாரிநாத். - படம்: இணையம்

புதுடெல்லி:  இந்து புனிதத் தலங்களில் ஒன்றான உத்​த​ராகண்ட் மாநிலத்​தின் மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத் கோயிலுக்குச் செல்ல கம்பிவட வண்டி (Ropeway) அமைக்கப்பட உள்ளது.

ரூ.4,081 கோடி (S$62.16 பில்லியன்) செல​வில் அதானி குழு​மம் அப்பணியை மேற்​கொண்​டுள்​ளதாக அதானி குழுமத் தலை​வர் கவுதம் அதானி புதன்கிழமை (அக்டோபர் 15) தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனைப் “பக்திக்கும் நவீன உள்கட்டமைப்புக்கும் இடையிலான பாலம்,” என்று அவர் வருணித்துள்ளார்.

சோன்​பிர​யாகில் இருந்து கேதார்​நாத் வரை மொத்​தம் 12.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு கம்பி வடம் அமைக்கப்படுகிறது.

ஆறு ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் இக்கம்பி வட வண்டியின் மூலம் கேதார்நாத் பயணம் 9 மணி நேரத்​தில் இருந்து 36 நிமிடங்​களாக குறை​யும்.

தேசிய ரோப்வேஸ் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அதானி எண்டர்பிரைசசின் சாலைகள், மெட்ரோ, ரயில், நீர் (RMRW) பிரிவால் கட்டப்படும். அதானி எண்டர்பிரைசஸ் 29 ஆண்டுகளுக்கு இதனை நிர்வகிக்கும்.

இக்கம்பிவட வண்டி ஒரு திசையில் ஒரு மணி நேரத்திற்கு 1,800 பயணிகளை ஏற்றிச் செல்லும். ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 20 லட்சம் பேருக்குச் சேவை செய்யும்.

குறிப்புச் சொற்கள்