கேரளாவைக் ‘கேரளம்’ என மாற்ற இந்திய அமைச்சரவை ஒப்புதல்

கேரளாவைக் ‘கேரளம்’ என மாற்ற இந்திய அமைச்சரவை ஒப்புதல்

1 mins read
1c377458-c5ce-4cb4-a553-b7c92602a0a6
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கேரள முதல்​வர் பினராயி விஜயன். - படம்: எக்ஸ்/இந்தியப் பிரதமர் அலுவலகம்

புதுடெல்லி: இந்தியாவின் தென்பகுதியில் உள்ள கேரள மாநிலத்​தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்​று​வதற்​கு அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி தலை​மையி​லான அமைச்​சரவை ஒப்​புதல் வழங்கி உள்​ளது.

இன்னும் சில மாதங்களில் கேரள மாநிலத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ள நிலையில் பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ‘கேரளம்’ என்று பெயர் மாற்​று​வதற்​கான தீர்​மானத்​தை, கடந்த 2023-24ஆம் ஆண்​டில் கேரள சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் பின​ராயி விஜயன் கொண்டு வந்து நிறைவேற்​றி​னார்.

இந்​நிலை​யில், பிரதமர் மோடி தலை​மை​யில் மத்திய அமைச்​சர​வைக் கூட்​டம் புதுடெல்​லி​யில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) நடை​பெற்​றது. இந்​தக் கூட்​டத்​தில் கேரள மாநில பெயரை கேரளம் என்று மாற்​று​வதற்கு ஒப்​புதல் வழங்​கப்​பட்​டது.

இதையடுத்​து, பெயர் மாற்றத்துக்குக் கேரள மாநில சட்​டப்​பேர​வை​க்கு அதிபர் பரிந்​துரைப்​பார். சட்​டப்​பேர​வை​யின் கருத்​துகளைப் பெற்ற பிறகு மத்​திய அரசு அடுத்​த​கட்ட நடவடிக்கை எடுக்​கும்.

பெயர் மாற்​றம் தொடர்​பான மசோ​தாவுக்கு அதிபர் ஒப்​புதல் வழங்கிய பிறகு நாடாளு​மன்​றத்​தில் மத்​திய அரசு மசோதாவைத் தாக்​கல் செய்து நிறைவேற்​றும். இந்த நடை​முறை​கள் முழுமை பெற்​றவுடன், கேரளம் என்ற பெயர் அதி​கார​பூர்​வ​மாக அறிவிக்​கப்​படும்.

குறிப்புச் சொற்கள்