சோனியா, ராகுலுடன் கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் சந்திப்பு

சோனியா, ராகுலுடன் கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் சந்திப்பு

1 mins read
3b46134b-7f7e-4288-99c1-7b0a3113c7ed
(இடமிருந்து) ராகுல் காந்​தி, சோனியா காந்​தி, கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன், பிரி​யங்கா காந்தி. - படம்: எக்ஸ் தளம்/ வி.டி.சதீசன்

புதுடெல்லி: கேரள முதலமைச்ச​ராகப் பதவி​யேற்ற பிறகு வி.டி.சதீசன் முதல் முறை​யாக டெல்லி சென்றுள்ளார்.

டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்​லி​கார்​ஜுன கார்கே உள்​ளிட்ட காங்​கிரஸ் மூத்த தலை​வர்​களை அவர் சந்​தித்துப் பேசி​னார்.

கேரளா​வில் கடந்த மாதம் நடை​பெற்ற சட்​டமன்றத் தேர்​தலில், காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி வெற்றி பெற்றது.

அதன்மூலம் 10 ஆண்​டுகளுக்​குப் பிறகு கேரளாவில் அந்தக் கூட்டணி மீண்​டும் ஆட்​சி​யைப் பிடித்​தது. இதையடுத்து முதல்​வ​ராக வி.டி.சதீசன் ஏப்ரல் 18ஆம் தேதி பதவியேற்​றார்.

திரு சதீசன் வெள்ளிக்கிழமை (மே 22) இரவு டெல்லி சென்றார். அவருக்குக் காங்​கிரஸ் தொண்​டர்​களும் ஆதர​வாளர்​களும் டெல்​லி​யில் உள்ள கேரள இல்லத்​தில் உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

சனிக்கிழமை சோனியா காந்​தி, ராகுல் காந்​தி, மல்லிகார்ஜுன கார்​கே. கே.சி.வேணுகோ​பால், பிரி​யங்கா காந்தி உள்​ளிட்ட காங்​கிரஸ் மூத்த தலை​வர்​களை திரு சதீசன் சந்​தித்​துப் பேசி​னார்.

தேர்​தலில் தனக்கு ஆதர​வாகப் பிர​சா​ரம் செய்த மேலிடத் தலை​வர்​களுக்கு திரு சதீசன் நன்றி தெரி​வித்​துக் கொண்​டார்.

மேலும், இந்தச் சந்​திப்​பில் புதிய கேரள அரசின் செயல்​பாடு​கள் குறித்து விவா​திக்​கப்​பட்​ட​தாக கட்சி வட்​டாரங்​கள் தெரிவிக்கின்றன.

கேரளா​வில் கட்​சிக்கு புதிய மாநிலத் தலை​வரை நியமிப்​பது குறித்து காங்​கிரஸ் கட்​சிக்​குள் ஆலோ​சனை​கள் நடந்து வரும் வேளை​யில் இந்த சந்​திப்பு நிகழ்ந்​துள்​ளது.

திரு சதீசன் வரும் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்​திக்​க வாய்ப்​புள்​ள​தாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்