கேரளா: எலிக்காய்ச்சலால் 121 பேர் மரணம்

கேரளா: எலிக்காய்ச்சலால் 121 பேர் மரணம்

1 mins read
9043d46c-c919-4cc9-b16e-6de34fb053aa
இந்த மாதத்தில் மட்டும் 24 பேர் எலிக் காய்ச்சலால் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் - படம்: பிக்சாபே

கொச்சி: கேரள மாநிலத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே பல்வேறு காய்ச்சல்கள், தொற்றுநோய்கள் பரவத் தொடங்கின.

அரிய வகை காய்ச்சலான ‘மேற்குநைல்’, ‘அமீபிக்’ மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்களும் பரவின. இதற்கிடையே தற்போது எலிக்காய்ச்சலும் கேரளாவை பாதித்துள்ளது.

கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை எலிக் காய்ச்சலுக்கு 121 பேர் உயிரிழந்துள்ளனர் .மேலும் 1,936 பேர் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் 24 பேர் எலிக் காய்ச்சலால் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எலிக் காய்ச்சல் பாதிப்பு மற்றும் அதனால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமுடனும், விழிப்புடனும் இருக்குமாறு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்