சாலைச் சந்திப்பில் ‘பாகிஸ்தான்’ நீக்கப்படுகிறது

1 mins read
4106e6b5-9a53-408b-aa63-ee0affc45b6b
புதிய பெயரைச் சூட்ட கிராமப் பஞ்சாயத்து முடிவு செய்துள்ளது. - படம்: இந்திய ஊடகம்

கொல்லம்: கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள குன்னத்தூர் கிராமப் பஞ்சாயத்து நிலக்கல் வார்டில் பிரபல சாலைச் சந்திப்பு ‘பாகிஸ்தான் முக்கு’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக அந்தச் சந்திப்பு அந்தப் பெயரை வைத்தே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.

இந்த நிலையில், தற்போது இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பெயர் கிராமத்தில் இருக்கக்கூடாது என்ற கருத்து எழுந்தது.

பஞ்சாயத்து கவுன்சிலர்கள் அதே கோரிக்கையை வலியுறுத்தினர்.

‘பாகிஸ்தான் முக்கு’ என்ற பெயரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

அண்மையில் நடைபெற்ற பஞ்சாயத்துக் குழுக் கூட்டத்தில் பாஜக வார்டு உறுப்பினர் அனீஷ்யா அந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அதற்கு ஏராளமான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதனையடுத்து, ‘பாகிஸ்தான் முக்கு’ என்னும் பெயரை மாற்றவேண்டும் என அந்தக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

‘பாகிஸ்தான் முக்கு’ என்னும் பெயருக்குப் பதில் ‘இவருகலா’ என்று மாற்ற முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

பெயர் மாற்றத்திற்கான உத்தரவை மாநில அரசு பிறப்பித்தபிறகு முறையான அறிவிப்பு வெளியாகும் என்று கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்