கேரளாவின் திருநர் தம்பதிக்கு குழந்தை பிறந்தது

கேரளாவின் திருநர் தம்பதிக்கு குழந்தை பிறந்தது

1 mins read
30421bb5-b55f-430e-bcd0-370c4b0e353a
-
multi-img1 of 2

கேரளாவைச் சேர்ந்த திருநர் தம்பதி ஒன்றுக்கு குழந்தை பிறந்துள்ளது. புதன்கிழமை அன்று ஸஹாத் குழந்தை பெற்றெடுத்ததாக அவருடைய காதலர் ஸியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரித்தார். குழந்தை ஒரு மாதம் முன்கூட்டியே பிறந்ததாக அவர் குறிப்பிட்டார். குழந்தை ஆணா பெண்ணா என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

திருநங்கையான ஸியாவும், திருநம்பியான ஸஹாத்தும் தங்கள் மகப்பெறு புகைப்படங்களை அண்மையில் சமூகத் தளங்களில் பகிர்ந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து அந்த படங்கள் உலகெங்கும் பரவலாக பகிர்ந்துகொள்ளப்பட்டன.

குழந்தையின் பிறப்பு குறித்து பலரும் தம்பதிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.