எர்ணாகுளம்: தகவல் தொழில்நுட்ப ஊழியரைக் கடத்தியதாக எழுந்துள்ள புகாரை அடுத்து, நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாகி விட்டதாக தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் அந்த ஊழியர் மதுபான விடுதிக்குச் சென்றபோது, அவருக்கும் வேறு சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரைக் கடத்திச் சென்று தாக்கியதாகத் தெரிகிறது. இதுகுறித்து கடத்தப்பட்ட ஆடவர், காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் இருவர் கைதாகினர்.
கடத்தல் கும்பலுடன் லட்சுமி மேனனும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காவல்துறையில் அவரை விசாரிக்கத் திட்டமிட்டதாகவும் இதையறிந்த லட்சுமி மேனன் தலைமறைவாகிவிட்டதாகவும் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறை அவரைத் தொடர்புகொள்ள முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.