தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொலையாளிகளைப் பிடிக்க உதவிய 'கிங் கோஹ்லி'

1 mins read
17197eb4-0a2f-488b-8d68-56622142ad2f
படம்: டுவிட்டர் -

இந்தியாவின் பெங்களூரு நகரில் 82 வயது மூதாட்டியைக் கொலை செய்த மூன்று கொலையாளிகளைப் பிடிக்க 'கிங் கோஹ்லி' என்ற வாசகம் உதவியுள்ளது.

மகாலட்சுமிபுரம் என்ற இடத்தில் கமலா என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார்.

அவரிடம் கடன் பெற்ற சந்தேக நபர்கள் கடனைத் திருப்பிக்கொடுக்காததால் அவரை மே 27ஆம் தேதி கொலை செய்துள்ளார்.

மூதாட்டி இறந்தது சில நாள்களுக்கு பின்னரே வெளிச்சத்திற்கு வந்தது.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சந்தேக நபர்கள் 'கிங் கோஹ்லி' என்ற வாசகத்தை அவரது ஆட்டோவின் பின்பக்கத்தில் எழுதியுள்ளார்.

கொலை நடந்த வட்டாரத்தில் ஆடவர் ஆட்டோவில் பதிவு எண் இல்லாமல் சில முறை நோட்டமிட்டுள்ளார்.

ஆடவர் ஆட்டோவில் வந்து நோட்டமிடுவது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகின.

இருப்பினும் பதிவு எண் இல்லாததால் சந்தேக நபரைப் பிடிக்க சிக்கல் எழுந்தது. அப்போது தான் ஆட்டோவில் இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது.

அதன் பின்னர் நடத்திய புலன் விசாரணை மூலம் சந்தேக நபர்கள் மூவரும் மைசூரு பகுதியில் பிடிபட்டனர்.

ஆடவர்கள் திட்டமிட்டு மூதாட்டியைக் கொன்றதாக அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்