சிங்கங்களுக்கு வேறு பெயர்சூட்ட உயர் நீதிமன்றம் உத்தரவு

1 mins read
9b3e23d6-a7b3-40ae-b79a-225ff54ba705
மாதிரிப்படம்: - ஊடகம்

கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி விலங்கியல் தோட்டத்தில் இருக்கும் அக்பர், சீதா சிங்கங்களுக்கு வேறு பெயர் சூட்டும்படி கோல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீதா, அக்பர் என்ற பெயர்களைக் கொண்ட சிங்கங்களை ஒரே இடத்தில் அடைக்க எதிர்ப்பு தெரிவித்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. சிங்கங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் எனவும் அம்மனுவில் கோரப்பட்டிருந்தது.

இவ்வழக்கு முன்னர் விசாரணைக்கு வந்தபோது, “பாசத்தின் அடிப்படையில் சிங்கங்களுக்கு இப்படிப் பெயர் சூட்டலாம். அதனை எப்படி நீங்கள் அவதூறு என நினைக்கலாம். சிங்கத்துக்கு சீதா என பெயர் வைப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது,” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதற்கு, “இன்று சிங்கத்துக்கு இப்படிப் பெயர் வைத்தவர்கள் நாளை கழுதைக்கு ஏதாவது தெய்வத்தின் பெயரை வைக்கலாம். இதனைத் தடுக்க வேண்டும். மேலும் நாங்கள் சீதாவை வணங்குகிறோம். அவர் கோவிலில்தான் இருக்க வேண்டும், காட்டிலன்று!” என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் வழக்கறிஞர் பதிலளித்தார்.

இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வியாழக்கிழமை (பிப்ரவரி 22) தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், சீதா, அக்பர் சிங்கங்களுக்கு வேறு பெயர் வைக்க உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், மரியாதைக்குரியவர்களின் பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க வேண்டாம் என்றும் அது அறிவுறுத்தி இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்