கோல்கத்தா: 17 தொகுதிகளின் வெற்றியைத் தீர்மானிப்பதில் முஸ்லிம்களுக்கு முக்கியப் பங்கு

கோல்கத்தா: 17 தொகுதிகளின் வெற்றியைத் தீர்மானிப்பதில் முஸ்லிம்களுக்கு முக்கியப் பங்கு

2 mins read
b1bd039d-94c2-4bde-83a7-491af0214daf
மேற்கு வங்கத் தேர்தலில் 17 சட்​டமன்றத் தொகு​தி​களின் வெற்றியைத் தீர்​மானிப்​பது முஸ்லிம்​களாகத்தான் இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: இந்து தமிழ்

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்​தில் இருப்போரில் 25 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். குறிப்​பாக, தலைநகர் கோல்​கத்​தா​வின் 17 சட்​டமன்றத் தொகு​தி​களின் வெற்​றியைத் தீர்​மானிக்கவிருப்​பது முஸ்லிம்​ வாக்காளர்கள்தாம்.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்​தலில் கோல்​கத்​தா​வின் அந்த 17 தொகு​தி​களை​யும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்​ஜி​யின் திரிணாமூல் காங்​கிரஸ் கட்சி கைப்​பற்​றியது.

ஆனால், இந்த முறை ஆளும் திரிணாமூல் கட்சி மீண்​டும் ஆட்சியைப் பெறுமா பாஜக தட்டிச்செல்லுமா என்ற கேள்வி எழுந்​துள்​ளது.

கோல்​கத்​தா​வின் மெட்​டி​யாபுருஸ் தொகு​தி​யில் சுமார் 60 விழுக்காட்டு முஸ்​லிம் வாக்​காளர்​கள் உள்​ளனர்.

அந்நகரின் துறை​முகத் தொகு​தி​யில் சுமார் 51 விழுக்காடும் பாலிகஞ்ச் தொகு​தி​யில் 50 விழுக்காடும் முஸ்​லிம் வாக்​காளர்​கள் இடம் பெற்​றுள்​ளனர்.

இந்த ​முறை கோல்​கத்​தா​வின் பவானிபூர் தொகு​தி​யில் முதல்​வர் மம்தா மீண்​டும் போட்​டி​யிடு​கிறார்.

அவரை எதிர்த்து பாஜக மாநிலத் தலை​வர் சுவேந்து அதி​காரி போட்​டி​யிடு​கிறார். அதனால் அந்தத் தொகுதிமீது அனை​வரின் கவனமும் உள்​ளது.

மேலும், சிபிஎம் கட்​சி​யைச் சேர்ந்த ஜிப் பிஸ்​வாஸ், காங்​கிரஸ் கட்சியில் பிரதீப் பிர​சாத் போட்​டி​யிடு​கின்​றனர்.

புதிய முஸ்​லிம் கட்சி தொடங்​கி​யுள்ள ஹுமாயூன் கபீர், தனது ஜேயுபி சார்​பில் பூனம் என்​பவரை வேட்​பாள​ராக நிறுத்தியுள்ளார்.

அத்தொகு​தி​யில் 76 விழுக்காட்டு வாக்​காளர்​கள் இந்​துக்​கள். சுமார் 24 விழுக்காட்டினர் முஸ்​லிம்​கள். அதைத் தவிர பவானிபூரில் உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்​க்கண்ட் ஆகிய மாநிலங்​களைச் சேர்ந்​தவர்​களின் எண்​ணிக்​கை​யும் கணிச​மாக உள்​ளது.

அவர்​களு​டைய வாக்​கு​கள் முஸ்​லிம் வாக்​கு​களில் இருந்து மாறு​படும் வாய்ப்​பு​கள் உள்​ளன.

மேலும், வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்​தின்போது பல லட்​சம் முஸ்லிம்கள் வாக்​குரிமையை இழந்​துள்​ளனர்.

எனவே, பவானிபூர் தேர்​தல் முடிவு எப்​படி இருக்​கும்​ என்​பது மே 4ஆம் தேதி வாக்​குகள் எண்ணப்படும்போது தெரியவரும்​.

குறிப்புச் சொற்கள்