கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தரவுகள் கசிந்தன

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தரவுகள் கசிந்தன

2 mins read
6098c8fe-46e2-4e43-b528-ccb12b74e969
நெல்லையில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையம், இந்தியாவின் ஏழு அணுமின் நிலையங்களில் ஆகப் பெரியதாகும். - கோப்புப் படம்: இடிவிபாரத்

பெங்களூரு: தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு, விநியோகம் தொடர்பான முக்கியத் தரவுகள் கசிந்துள்ளன.

மிகவும் அறியப்பட்ட இணைய ஊடுருவல் கும்பலான ‘வேர்ல்டு லீக்ஸ்’ ஆவணங்களைக் கசியவிட்டுள்ளது. அதில் 858,000 ரிலையன்ஸ் கோப்புகளில் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்குச் சொந்தமான 19,000 ரகசியக் கோப்புகள் என்று அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அமைந்துள்ளது.

ரஷ்ய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட நீர் அழுத்த அணு உலைகளில் மொத்தமாக ஏழு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன.

அதில், அணுமின் நிலையத்தின் வரைபடங்கள், விநியோக விவரங்கள், காற்றோட்டம், குளிரூட்டும் அமைப்புகளின் வடிவமைப்பு, கட்டுப்பாட்டு அறையின் தரைத்தளம் போன்ற 19,000 உணர்திறன்மிக்க கோப்புகள் அடங்கியுள்ளன.

அந்த ஆலையின் ஒப்பந்ததாரர்களில் ஒன்றான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம், ‘யோட்டா’ தரவு மையத்தில் உள்ள தங்களது சேமிப்பகத்தில் தரவுக் கசிவு ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளது.

மே 29ஆம் தேதி ரிலையன்ஸ் சேமிப்பகத்தில் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டறிந்து தடுத்ததாக யோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், ஜூன் இறுதியில் தரவுக் கசிவு கோரிக்கைகள் எழுந்ததைத் தொடர்ந்து விரிவான தொழில்நுட்ப விசாரணை நடைபெற்று வருகிறது.

அணுமின் நிலையங்களை இயக்கும் இந்திய அணுசக்திக் கழகம் ஆகியவை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விசாரணை நடத்தி வருகிறது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அணு உலைகளின் முக்கிய அமைப்புகளை ரஷ்யாவின் ரோசாட்டம் நிறுவனம் வழங்குவதால், அவை பாதிக்கப்படவில்லை என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், தரவுக் கசிவு அணுமின் நிலையத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தீய எண்ணம் கொண்டவர்கள் இந்த வரைபடங்களைப் பயன்படுத்தி பாதுகாப்பு பலவீனங்களைக் கண்டறிய வாய்ப்புள்ளது. இணையப் பாதுகாப்பில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்களை இந்தச் சம்பவம் மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்