தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லட்டு விவகாரம்: துணை முதல்வர் பவன் கல்யாண் மீது காவல்துறையில் புகார்

1 mins read
dc33c2b3-b450-4f1f-bd13-683137c65827
ஆந்திர துணை முதல்வரும் தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண். - படம்: இந்திய ஊடகம்

அமராவதி: திருப்பதி கோவில் லட்டு தயாரிக்கப் பயன்படுத்திய நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்து இருந்ததாகவும் இந்த லட்டுகளை அயோத்திக்கும் அனுப்பி வைத்து இருப்பதாகவும் ஆந்திர துணை முதல்வரும் தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் குற்றம் சாட்டி உள்ளார்.

இதையடுத்து பவன் கல்யாண் மீது பிரஜா சாந்தி கட்சியின் தலைவர் கே.ஏ.பால், ஹைதராபாத்தில் உள்ள பஞ்சா குட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பவன் கல்யாண் பேச்சு பைத்தியக்காரத்தனமாக உள்ளது.

“அயோத்தி ராமர் கோவிலுக்கு விலங்குகள் கொழுப்பு கலந்த ஒரு லட்சம் லட்டுகள் தயாரித்து அனுப்பியதாக குற்றம் சாட்டி உள்ளார். அயோத்தி ராமர் கோவில் நிகழ்ச்சி ஜனவரி மாதம் நடந்தது.

“ஆனால் லட்டுவில் கலப்படம் செய்த விஷயத்தை சந்திரபாபு நாயுடு வெளியிட்டது ஜூலை மாதத்தில்.

“அப்படி இருக்க ஜனவரியில் திருப்பதி லட்டுவில் கலப்படம் நடந்தது இவருக்கு எப்படித் தெரியும். எனவே சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் பவன் கல்யாண் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்