ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தின் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த லட்சத்திற்கும் மேலான விநாயகர் சிலைகளைப் பொதுமக்கள் ஊர்வலமாகக் கொண்டு சென்று ஹுசைன் சாகர் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளிலும் கரைத்தனர்.
ஏறக்குறைய 25 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். மிகப்பெரிய விநாயகர் சிலைகளைக் கரைக்க ராட்சத பாரந்தூக்கிகளும் பயன்படுத்தப்பட்டன.
ஹைதராபாத் விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு வந்தபோது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கணபதி பப்பா மோரியா’ எனப் பாடியபடி சாலைகளில் திரண்டனர். பின்னர், ஹுசைன் சாகரில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.
ஹைதராபாத்தில் உள்ள பண்ட்லகூடா பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான விநாயகர் சிலையின் கையில் இருந்த மெகா லட்டு பிரசாதம் ரூ.1.87 கோடிக்கு ஏலம் போனது.