பாட்னா: பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதாதளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கும் அவரது மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவிக்கும் வழங்கப்பட்டு வந்த உயரிய ‘இசட்-பிளஸ்’ பாதுகாப்பு மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பீகாரில் உள்ள முக்கியப் புள்ளிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
இதேபோல், லாலு பிரசாத்தின் மூத்த மகனும் ஜன்சக்தி ஜனதா தளத் தலைவருமான தேஜ் பிரதாப் யாதவுக்கு வழங்கப்பட்டு வந்த ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை மீட்டுக்கொள்வதாக அரசுத் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதேவேளையில், லாலுவின் மற்றொரு மகனான தேஜஸ்வி யாதவுக்கு வழங்கப்பட்டு வரும் ‘ஒய்-பிளஸ்’ பாதுகாப்பு தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேஜஸ்வியின் மனைவி ராஜ் யாதவ், லாலுவின் மகளும் மாநிலங்களவை எம்.பி.யுமான மிசா பாரதி ஆகியோருக்கு தற்போது நடைமுறையில் உள்ள பாதுகாப்பை எவ்வித மாற்றமுமின்றி தொடரவும் பீகார் அரசு முடிவெடுத்துள்ளது.

